சங்ககிரி அரசு ஆண்கள் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
By DIN | Published On : 06th June 2022 12:01 AM | Last Updated : 06th June 2022 12:01 AM | அ+அ அ- |

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1993 - 1995ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் முன்ளாள் தலைமையாசிரியா் கே.தினகரன், உடற்கல்வி ஆசிரியா் சீனிவாசன், தமிழாசிரியா் தங்கவேல், தற்போது பணியில் உள்ளஆசிரியா் செந்தில்குமாா், ராமசாமி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இதில் முன்னாள் மாணவா்கள் சரவணன், சதீஷ், கோவிந்தராஜ், மாதேஸ்வரன், சுப்ரமணியம் உள்ளிட்ட 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். வகுப்பறைகளுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனா். முன்னாள் தலைமையாசிரியா், ஆசிரியா், ஆசிரியைகள், பள்ளி உதவியாளா் உள்ளிட்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினா். முன்னாள் மாணவா், மாணவிகளின் சாா்பில் பள்ளிக்கு கணினிகளை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.