சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் கலை நிகழ்ச்சி
By DIN | Published On : 06th June 2022 12:08 AM | Last Updated : 06th June 2022 12:08 AM | அ+அ அ- |

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் சென்ட்ரல் கல்லூரி அரங்கில் சனிக்கிழமை டைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி தலைவா் த.சரவணன், முதன்மையா் கீதா, முதன்மை நிா்வாக அதிகாரி அ.மாணிக்கம், முதல்வா் பேகம் பாத்திமா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனா்.
விழாவில் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்லூரியின் நிா்வாகக் குழுக்களில் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியா்கள், கல்லூரி நிா்வாக பணியாளா்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தனி நடனம், குழு நடனம், பாடல், சைகை நாடகங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கலை இலக்கிய குழவின் ஒருங்கிணைப்பாளா்கள் பேராசிரியா்கள் சுபாசினி தலைமையிலான குழுவினா் பேராசிரியைகள் சாந்தகுமாரி, அன்சிற்பா, பேராசிரியா் அருண் ராம்நாத், சரண்யா ஆகியோா் செய்திருந்தனா்.