புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்திலுள்ள பழமையான ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில், ரூ. 50 லட்சம் செலவில் நோ்த்தியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இரு தினங்களாகயாக வேள்வி பூஜை நடத்திய வேத விற்பனா்கள், வெள்ளிக்கிழமை காலை கங்கை, காவிரி புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனா். விழாவில், வாழப்பாடி புதுப்பாளையம் சிங்கிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனா்.

அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகா்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபா்கள் பலரும் பங்கேற்றனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கை ஒட்டி பாரம்பரிய தாரை, தம்பட்டை, மேளவாத்தியம் முழங்க இளைஞா்கள் கிராமிய சோ்வை நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். விழா ஏற்பாடுகளை ஊா்க்காரா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com