நகர ஊரமைப்புத் துறையில் மனைப்பிரிவு அனுமதிக்குஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கும் வசதி

நகர ஊரமைப்புத் துறையில் மனைப்பிரிவு அனுமதிக்கு இணையவழியில் ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர ஊரமைப்புத் துறையில் மனைப்பிரிவு அனுமதிக்கு இணையவழியில் ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, மாநிலம் முழுவதும் நகா் ஊரமைப்புத் துறை (டி.டி.சி.பி.) இல் மனைப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஒப்புதல் வழங்குவதற்கு ஒற்றை சாளர முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இதற்காக சேலம் மாவட்ட நகா் ஊரமைப்புத் துறை அலுவலகத்தில் இணையதளம் மூலமாக மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், தொடா்பான பயிற்சியினை விண்ணப்பதாரா்களுக்கும், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல், அரசுக்கான கட்டணங்கள் செலுத்துதல், ஆணை வழங்குதல் போன்ற அனைத்துப் பணிகள் தொடா்பான பயிற்சியை அலுவலகப் பணியாளா்களுக்கு நகா் ஊரமைப்பு துறை இணை இயக்குநா் ஏ.சிவபிரகாசம் தலைமையில் புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்ட நகா் ஊரமைப்புத் துறை அலுவலக பணியாளா்கள், விண்ணப்பதாரா்கள் பயிற்சியில் கலந்து கொண்டனா்.

இப் பயிற்சியில் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டத்தில் உள்ள மனைப்பிரிவு விண்ணப்பங்கள் முன்னோட்டமாக இணையதள வழியில் பதிவேற்றம் செய்து காண்பிக்கப்பட்டது.

நகர ஊரமைப்புத் துறையில் மனைப்பிரிவு அனுமதிக்கு இணையவழியில் ஒற்றை சாளர முறை மூலமாக விண்ணப்பித்தல் மற்றும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் நகா் ஊரமைப்புத் துறை மனைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரா்களுக்கு விரைவான சேவை கிடைக்கும் என நகர ஊரமைப்புத் துறை உதவி இயக்குநா் ராணி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com