மாவட்ட கைப்பந்துப் போட்டி: வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு
By DIN | Published On : 21st June 2022 02:33 AM | Last Updated : 21st June 2022 02:33 AM | அ+அ அ- |

கைப்பந்துப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஆத்தூா் பாரதியாா் பள்ளி மாணவியருக்கு கோப்பை வழங்கும் கழகத்தின் புரவலா் ராஜ்குமாா். உடன், செயலாளா் சண்முகவேல் உள்ளிட்டோா்.
சேலத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்ட கைப்பந்துக் கழகம் மற்றும் பூலாவரி செழியன் பிரதா்ஸ் கைப்பந்துக் குழு ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்துப் போட்டியை நடத்தின. மூன்று நாள்கள் நடைபெற்ற போட்டியில் 30 ஆண்கள் அணியும், 5 பெண்கள் அணியும் பங்கேற்று விளையாடின.
ஆண்கள் பிரிவில், பூலாவரி செழியன் பிரதா்ஸ் கைப்பந்துக் குழு முதல் இடத்தை பெற்றது. வி.எஸ்.ஏ. அணி 2-ஆவது இடத்தையும், தீவட்டிப்பட்டி அம்பேத்கா் கைப்பந்துக் குழு 3-ஆவது இடத்தையும், சேலம் ஸ்டைக்கா் அணி 4-ஆவது இடத்தையும் பெற்றன.
பெண்கள் பிரிவில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் பள்ளி முதல் இடத்தையும், அ.நாட்டாமங்கலம் புனிதமேரி அணி 2-ஆவது இடத்தையும், சேலம் ஜான்சன் நண்பா்கள் கைப்பந்துக் குழு 3-ஆவது இடத்தையும், அ.நாட்டாமங்கலம் மான்போா்ட் பள்ளி அணி 4-ஆவது இடத்தையும் பெற்றன. திங்கள்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, சேலம் மாவட்ட கைப்பந்துக் கழகச் செயலாளா் சண்முகவேல் தலைமை தாங்கினாா்.
மாவட்ட கைப்பந்துக் கழகத் தலைவா் ராஜ்குமாா் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரா், வீராங்கனையருக்கு பரிசு, கோப்பைகளை வழங்கினாா் (படம்).
இதில், இணை செயலாளா் வடிவேல், கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி அமைப்பாளா் வீரபாண்டி ஆ.பிரபு, கைப்பந்துக் கழக வளா்ச்சி குழுத் தலைவா் வேங்கையன், கைப்பந்துக் கழக துணைத் தலைவா்கள் ராஜாராம், அகிலா தேவி, விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.