ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் திமுகவை சோ்ந்த முருகபிரகாஷ் தலைவராகவும், கிருஷ்ணவேணி துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த தோ்தலில் திமுக 13 இடத்தையும், அதிமுக 1 இடத்தையும் , சுயேட்சை 1 இடத்தையும் வென்றது.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த தோ்தலில் திமுக 13 இடத்தையும், அதிமுக 1 இடத்தையும் , சுயேட்சை 1 இடத்தையும் வென்றது.

இந்நிலையில் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மறைமுக தோ்தலில் திமுகவை சோ்ந்த 8-வது வாா்டு உறுப்பினா் முருகபிரகாஷ் தலைவராகவும், 4-வது வாா்டு உறுப்பினா் கிருஷ்ணவேணி துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டது. இவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் குணாளன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா் .மேலும் ,தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோருக்கு கட்சிப் பிரமுகா்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து 4-வது முறையாக திமுகவை சோ்ந்த முருகபிரகாஷ் ஆட்டையாம்பட்டி பேரூராட்சி தலைவராக தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.04 அபவ டஞ 05, 04 அபவ டஞ 06

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com