ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த கே.அன்பழகன் புதன்கிழமை பதவி ஏற்றார்.
ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த கே.அன்பழகன் புதன்கிழமை பதவி ஏற்றார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சியில் திமுக சார்பில் பாபு (எ) வெங்கடேஸ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுகவை சேர்ந்த கே.அன்பழகன், போட்டி வேட்பாளராக களமிறங்கி மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று 4 தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் அன்றைய தினம் பதவி ஏற்கவில்லை.

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார். 

இதனையடுத்து புதன்கிழமை ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக கே.அன்பழகன் பொறுப்பேற்றார். இவருக்கு திமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், மக்கள் எதிர்பார்க்கும் வகையில் முறையாக செய்து கொடுக்கவும், தேவையான பணிகளை மேற்கொள்வோம் எனவும், புதிய பேரூராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட கே.அன்பழகன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com