ஆத்தூரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை
By DIN | Published On : 15th March 2022 08:57 AM | Last Updated : 15th March 2022 02:52 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் ஆத்தூரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஆத்தூர் பிரபலமான நகைக்கடை மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை பூந்தமல்லி நிர்வாக பொறியாளர் ஏ.வரதராஜ பெருமாள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.