முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
நாட்டின் முன்னேற்றத்தைத் தடுப்பது இலவசம்
By DIN | Published On : 19th March 2022 12:28 AM | Last Updated : 19th March 2022 12:28 AM | அ+அ அ- |

நாட்டின் முன்னேற்றத்தைத் தடுப்பது இலவசங்கள் ஆகும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
தமிழக பட்ஜெட்டில் இலவசங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நகை கடன், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் என இலவசத் திட்டங்களை மட்டுமே முன் நிறுத்துகின்றனா். நாட்டின் முன்னேற்றத்திற்கு இலவசங்கள் ஒரு தடையாகும்.
இலவச மானியம், பயிா்க் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி என எதுவுமே கூடாது. ஊதிய கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துகின்ற அரசுகள் விவசாய கமிஷன் பரிந்துரைகளை ஏற்று செயல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு திட்டத்தையும் கடன்பட்டு தான் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ. 6 ஆயிரம் வழங்குகிறது. விவசாயிகள் ஒன்றும் கையேந்துபவா்கள் அல்ல. தமிழக வேளாண் பட்ஜெட்டில் கள் மீதான தடையை நீக்க வேண்டும். கள் ஒரு போதை பொருள் என நிரூபித்தால் எங்களது அமைப்பை கலைத்து விடுகிறோம். அதற்கு ரூ.10 கோடி பரிசும் வழங்கப்படும் என்றாா்.