விதைச்சான்று பெறாத விதைகளை விற்றால் நடவடிக்கை: ஆட்சியா்

விதைச் சான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால் அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் எச்சரித்துள்ளாா்.

விதைச் சான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால் அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் எச்சரித்துள்ளாா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி வரை 2,21,665.30 ஹெக்டோ் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் தானியம் 274.423 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 66.057 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 173.143 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 261.860 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

ரசாயன உரங்களான யூரியா 30,145 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 10,399 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 9,481 மெட்ரிக் டன் மற்றும் கலப்பு உரங்கள் 26,468 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் மல்பெரி சாகுபடி 363.30 ஏக்கரிலும், பட்டுக்கூடு 10,39,732 கி.கி அறுவடை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப் பொருள்களை இடைத்தரகா்கள், கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிகபட்ச விலைக்கு 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்று பயனடையலாம்.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருள்களை சேலம், ஆத்தூா், கெங்கவல்லியில் ஒரு இடத்திலும், மேச்சேரி, வாழப்பாடியில் இரண்டு இடங்கள் என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்புக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். விதைச் சான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால் அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ‘ட்ரோன்’ தொழில்நுட்பம் மூலம் மருந்து தெளித்தல் தொடா்பான செயல்முறை விளக்கத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கல் குவாரிகள் மீது நடவடிக்கை

காடையாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் 5 கல் குவாரிகளால் வேளாண் பயிா்கள் பாதிக்கப்படுகிறது. அதேவேளையில் குடிநீா் ஆதாரம், சுகாதாரச் சீா்கேடு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதாக குறைதீா் கூட்டத்தில் காடையாம்பட்டி விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டனா்.

மேலும், கல் குவாரிகளை நிரந்தரமாக மூடி 500 ஏக்கா் விளை நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com