சேலம் பொறியியல் கல்லுாரிக்கு லீலாவதி விருது

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘லீலாவதி விருதுக்கான ’ ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இரண்டாமிடத்தை வென்றது.
தேசிய அளவிலான லீலாவதி விருது பெற்ற சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரி குழுவினா்.
தேசிய அளவிலான லீலாவதி விருது பெற்ற சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரி குழுவினா்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘லீலாவதி விருதுக்கான ’ ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இரண்டாமிடத்தை வென்றது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான லீலாவதி விருதுக்கான போட்டியில், மாணவ-மாணவியா்கள் குழுவினா் பங்களிப்போடு, நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன.

இதில் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் இயங்கி வரும் கும் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ‘பெண்கள் மற்றும் இளம்பருவ ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் மாணவ, மாணவியா்களால் சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

இதற்கான விருது வழங்கும் விழா, தில்லியிலுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழும அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சாா்பாக கல்லூரி முதல்வா் ஆா்.எ.சங்கரன், இயந்திரவியல் துறை தலைவா் ஆா்.ஸ்ரீனிவாசன், பேராசிரியா் எஸ்.சுரேஷ் மற்றும் மாணவ-மாணவியா் கொண்ட குழுவினரிடம், ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையுடன் லீலாவதி விருது மற்றும் சான்றிதழ்ககளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் தலைவா் அனில் ஸஹஸ்ரபுதே வழங்கினாா்.

தேசிய அளவிலான போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்த சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரி ஆசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவியருக்கு கல்லுாரி நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com