உலக தண்ணீர் தினம்: பேருந்து பயணிகளுக்காக இரு குடிநீர் தொட்டிகள் அமைப்பு 

 உலக தண்ணீர் தினத்தினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி,
உலக தண்ணீர் தினம்: பேருந்து பயணிகளுக்காக இரு குடிநீர் தொட்டிகள் அமைப்பு 

சங்ககிரி:  உலக தண்ணீர் தினத்தினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி, ஓம்ராம் யோகா அறக்கட்டளையின் சார்பில் பேருந்து பயணிகள் குடிநீர் அருந்துவதற்காக இரு குடிநீர் தொட்டிகளை செவ்வாய்க்கிழமை அமைத்தனர். அத்தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சங்ககிரி பேரூராட்சித்தலைவர் தொடக்கி வைத்தார். 

சங்ககிரியில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேருந்து பயணிகள் வெயிலில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சேலம் பேருந்து நிறுத்தம், வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் பகுதிகளில் தற்காலிக பந்தல் அமைத்தனர்.  

அப்பந்தலில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் குடிநீருக்காக பல இடங்களை தேடி சென்று வந்ததையடுத்து உலக தண்ணீர் தினத்தினையொட்டி சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி, ஓம்ராம் யோகா அறக்கட்டளைகளின் சார்பில் இரு இடங்களிலும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டன. அக்குடிநீர் தொட்டிகளை பேரூராட்சித்தலைவர் மணிமொழிமுருகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீரை வழங்கினார்.  

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பி.தங்கமுத்து, பேரூராட்சி துணைத்தலைவர் அருண்பிரபு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் கே.எம்.முருகன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக இணைச் செயலர் செல்வராஜ், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை தலைவர் மற்றும் 9வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் கி.சண்முகம், நிர்வாகிகள் பொன்.பழனியப்பன், வழக்குரைஞர் மணிசங்கர், ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், செந்தில்குமார், சீனிவாசன், கிஷோர், பசுமை சங்ககிரி அமைப்பின் தலைவர் மரம் பழனிசாமி, பசுமை சீனிவாசன், பசுமை கனகராஜ், காந்தி, ஓம்ராம் யோகா அறக்கட்டளைத் தலைவர் பி.சுந்தரவடிவேல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com