தம்மம்பட்டி அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் மக்கள் பாதிப்பு: மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை

தம்மம்பட்டி அருகே திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கு சுகாதாரத் துறையினர் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கு சுகாதாரத் துறையினர் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி 3 -வது வார்டு குள்ளம்பேட்டையில் வசிக்கும் மக்கள் சிலருக்கு, கடந்த திங்கள்கிழமை அன்று திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 

அவர்கள் செந்தாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றனர். இதைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமையும் அப்பகுதி மக்கள் சிலருக்கு அதே பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் ஜெமினி உத்தரவின் பேரில் வட்டார தலைமை மருத்துவர் வேலுமணி தலைமையில் மருத்துவர்கள் சதீஷ்குமார், மகாலட்சுமி, வனிதா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என 40 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். 

இதன் தொடர்ச்சியாக, அப்பகுதிக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீர் மற்றும்  பாதிப்புக்குள்ளானவர்களின் வீடுகளில் சமைத்த உணவு மாதிரிகள் சேலத்தில் உள்ள உணவு பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் நோய் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com