சமூக அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்தி எல்லை பாதுகாப்புப் படை வீராங்கனைகள் விழிப்புணர்வு பேரணி

எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீராங்கனைகள் குழுவினர் இருசக்கர வாகனத்தில் மதுரை புறப்பட்டு சென்றனர்.
சமூக அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்தி எல்லை பாதுகாப்புப் படை வீராங்கனைகள் விழிப்புணர்வு பேரணி

சேலம்: எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீராங்கனைகள் குழுவினர் இருசக்கர வாகனத்தில் மதுரை புறப்பட்டு சென்றனர்.

சமூக அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்தி இந்திய எல்லை பாதுகாப்புப் படை பெண்கள் சிறப்பு பிரிவு படையைச் சேர்ந்த சீமா பவானி குழுவினர் தில்லி முதல் கன்னியாகுமரி வரை ராயல் என்ஃபீல்ட் வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்‌.) சிறப்பு பெண்கள் பிரிவை சேர்ந்த பாதுகாப்புப் படை பெண் வீரர்கள், சமூக அதிகாரத்தில் பெண்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சீமா பவானி என்ற பெயருடன் இந்தியாவின் தலைநகரம் தில்லி முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தில்லியில் துவங்கிய வாகன பிரசாரம் நாடு முழுவதும் சுற்றி பெங்களூருவைத் தொடர்ந்து தமிழகத்தில் சேலம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை கடந்து சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து தமிழக-கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், தருமபுரி, ஓமலூர் வழியே வியாழக்கிழமை இரவு சேலம் வந்தடைந்தனர். 

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற எல்லை பாதுகாப்புப் படை வீராங்கனைகளுக்கு தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி மலர் மாலை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேலத்தில் வெள்ளிக்கிழமை காலை மல்லூர், ராசிபுரம், கரூர் வழியாக மதுரை புறப்பட்டுச் சென்றனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பலம் மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது எனவும், பெண்கள் சமூக அதிகாரத்திற்கு அதிக அளவில் தங்களின் பங்களிப்பை செய்ய வேண்டுமென தெரிவித்தனர். 6000 கிலோ மீட்டருக்கு அதிகமாக இந்திய மக்களை சந்தித்து பிரசாரத்தின் நோக்கம் குறித்து விழிப்புணர்வு செய்தனர்

இந்த நிகழ்ச்சியில் துணை கமாண்டர் ரான்சு ரெய்னா உள்ளிட்ட சீமா பவானி குழுவைச் சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்புப் படை பெண் வீராங்கனைகள், பாஜக நிர்வாகி ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com