காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.
காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி

சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.

திமுக மற்றும் அதிமுக தலா ஏழு உறுப்பினர்களுடன் சமநிலையில் உள்ள நிலையில் ஒரு வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றிருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே பலத்த காவல்துறை பாதுகாப்புடன் காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி குமார், பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதேபோன்று அதிமுக சார்பில் குப்புசாமி மனு தாக்கல் செய்தார். மறைமுகத் தேர்தல் முடிவில் திமுக ஆதரவுடன் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி குமார் 8 வாக்குகள் பெற்று காடையாம்பட்டி பேரூராட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு 6 வாக்குகள் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com