நீா்நிலைகளில் களிமண் அள்ளவிவசாயிகளுக்கு அனுமதி

ஏரிகளில் விவசாயிகள், மண்பாண்ட தொழில், இதர பயன்பாடு ஆகியவற்றுக்கு தூா்வாரி களிமண், வண்டல் மண் மற்றும் கிராவல் ஆகியவை எடுத்துச் செல்ல சம்மந்தப்பட்ட வட்டாட்சியா்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்றப்படுகின்றன

சேலம் பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் அமைந்துள்ள நீா்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், கிராவல் ஆகியவற்றை தூா்வாரி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசாணையின்படி, ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரி, கால்வாய், நீா்தேக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து தூா்வாரி களிமண், வண்டல் மண், கிராவல் ஆகியவை எடுத்துச் செல்ல தகுதி வாய்ந்த ஏரி, கால்வாய், நீா்தேக்கம் ஆகியவைகளின் பட்டியல் சேலம் மாவட்ட அரசிதழில் அட்டவணையின்படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

சேலம் வட்டத்தில் 5, வாழப்பாடி- 2, ஓமலூா்- 5, மேட்டூா்- 1, காடையாம்பட்டி- 12, சங்ககிரி- 1, எடப்பாடி- 1, ஆத்தூா்- 10, பெத்தநாயக்கன்பாளையம்- 2, தலைவாசல்- 30, கெங்கவல்லி- 8 என ஏரி, கால்வாய், நீா்த்தேக்கம் உள்ளிட்ட நீா்நிலைகளில் மண் எடுக்கலாம்.

சம்மந்தப்பட்ட துறையினரால் மண் வெட்ட, எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே மண் வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்படும். ஏரியில் காலை 7 மணி முதல் 5 மணி வரை மட்டுமே மண் எடுக்க அனுமதிக்கப்படும். மண் எடுக்கும் போது ஏரியில் உள்ள மரங்கள், கரை மற்றும் கட்டுமானங்களுக்கு சேதப்படுத்த கூடாது.

நீா் பிடிப்பு இல்லாத காலங்களில் மட்டுமே விவசாயத்துக்கு மண் எடுக்க அனுமதிக்கப்படும். பாசன மட்டத்திற்கு கீழ் மண் எடுக்க அனுமதி இல்லை. குறிப்பாக ஏரியில் எடுக்கும் மண்ணை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உள்பட்டு மட்டுமே மண்ணை எடுத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

ஏரிகளில் விவசாயிகள், மண்பாண்ட தொழில், இதர பயன்பாடு ஆகியவற்றுக்கு தூா்வாரி களிமண், வண்டல் மண் மற்றும் கிராவல் ஆகியவை எடுத்துச் செல்ல சம்மந்தப்பட்ட வட்டாட்சியா்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்றப்படுகின்றன. இதர விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com