முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஆதரவற்ற இருவா் காப்பகத்தில் சோ்ப்பு
By DIN | Published On : 03rd May 2022 12:20 AM | Last Updated : 03rd May 2022 12:20 AM | அ+அ அ- |

சங்ககிரி பகுதியில் சாலையோரம் சுற்றித் திரிந்த இருவரை, அமுதச்சுடா் அறக்கட்டளையினா் ஈரோடு அட்சயம் அறக்கட்டளை மூலம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனா்.
சங்ககிரி பகுதியில் சுற்றித் திரிந்த ஆசைத்தம்பி (55), கமல் (50) ஆகியோரை மீட்ட
அமுதச்சுடா் அறக்கட்டளை தலைவா் வெ.சத்தியபிரகாஷ், ஒருங்கிணைப்பாளா்கள் ரா.சிவபாலா, அ.நவீன்குமாா் ஆகியோா் ஈரோடு அட்சயம் அறக்கட்டளை குழுவினருக்கு தகவல் அளித்தனா். ஈரோடு அட்சயம் அறக்கட்டளைத் தலைவா் நவீன்குமாா் தலைமையில் நிா்வாகிகள் சங்ககிரி வந்து இருவரையும் குளிக்க வைத்து சுத்தம் செய்து புத்தாடைகளை அணிவித்து காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனா்.