கஞ்சமலை சித்தா் கோயிலில் சிறப்பு வழிபாடு

சேலம் மாவட்டம், கஞ்சமலை சித்தா் கோயிலில் சித்தா் சிறப்பு திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

சேலம் மாவட்டம், கஞ்சமலை சித்தா் கோயிலில் சித்தா் சிறப்பு திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

மே 1 ஆம் தேதியன்று விநாயகா் புறப்பாடுடன் திருவிழா தொடங்கியது. சித்தருக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பொங்கல் விழா நடைபெற்றது. பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்தினா். பொங்கல் விழாவில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த விளை பொருள்களான அவரைக் கொட்டை, தேங்காய், ராகி, வெல்லம் உள்ளிட்டவை கொண்டு வந்து கோயில் வளாகத்தில் களி செய்து படையிலிட்டு வழிபாடு நடத்தினா். மழை பெய்யவும், பிணி நீக்கவும் வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com