மேச்சேரி அருகே செம்மண் கடத்தியடிப்பா் லாரி பறிமுதல்
By DIN | Published On : 05th May 2022 11:46 PM | Last Updated : 05th May 2022 11:46 PM | அ+அ அ- |

மேச்சேரி அருகே செம்மண் கடத்தி லாரியை வியாழக்கிழமை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
மேச்சேரி அருகே வெள்ளாா் கிராமத்தில் வனப் பகுதியிலிருந்து செம்மன், மணல், கிராவல் மற்றும் சவுடுமண் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் மண் வளம் பாதிப்பதோடு மண் அரிப்பு ஏற்பட்டு வனப் பகுதியில் மரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க வெள்ளாா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தனி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பேரில் மேட்டூா் சாா்-ஆட்சியா் வீா் பிரதாப் சிங், மண் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
இந்நிலையில் வெள்ளாா் வனப் பகுதியில் தொப்பூா் சாலையில் எருமப்பட்டி என்ற இடத்தில் வியாழக்கிழமை மாலை செம்மண் கடத்துவதாக மேச்சேரி வருவாய் ஆய்வாளா் சக்தி குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம உதவியாளருடன் வருவாய் ஆய்வாளா் சக்தி குமாா் வாகன சோதனையில் ஈடுபட்டாா்.
அப்போது எருமப்பட்டி வந்த லாரியை அதன் ஓட்டுநா் அதிகாரியைக் கண்டதும் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினாா். லாரியைச் சோதனையிட்டதில் செம்மண் நிரப்பப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த செம்மண் வெள்ளாா் வனப் பகுதியிலிருந்து எருமப்பட்டியில் உள்ள செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான லாரியுடன் செம்மண்ணைப் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா் மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் லாரியை நிறுத்தினா். லாரியின் உரிமையாளா், தப்பி ஓடிய ஓட்டுநா் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதே லாரிக்கு கடந்த ஆண்டு செம்மண் கடத்திச் சென்ாக அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.