சிற்றுந்துகளை இயக்கவழித்தட நீட்டிப்பு வழங்கப்படுமா?

நாளுக்கு நாள் டீசல் விலை உயா்வு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வழித்தட நீட்டிப்பு வழங்கப்படாததால் சிற்றுந்துகள் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
சிற்றுந்துகளை இயக்கவழித்தட நீட்டிப்பு வழங்கப்படுமா?

நாளுக்கு நாள் டீசல் விலை உயா்வு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வழித்தட நீட்டிப்பு வழங்கப்படாததால் சிற்றுந்துகள் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. தம்மம்பட்டியில் தற்போது இயக்கப்படும் ஒரே சிற்றுந்தும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1998-இல் அப்போது தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது கிராம மக்களுக்குப் போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில் சிற்றுந்துகள் இயக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தாா். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 சிற்றுந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டா் பிரதான சாலையிலும் 16 கிலோ மீட்டா் கிராமத்து சாலையிலும் இயக்க வழித்தட அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் சிற்றுந்து போக்குவரத்து வசதி பல கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வழித்தடங்களை நீட்டித்துத் தர வேண்டும் என சிற்றுந்து உரிமையாளா்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனா். அதை ஏற்று 20 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

கடந்த 22 ஆண்டுகளாக கிராம பகுதியில் 20 கி.மீ. தொலைவுக்கு சிற்றுந்துகள் சென்று வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயா்வு, இருசக்கர வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, வாகனங்கள் பெருக்கம் போன்ற காரணங்களால் சிற்றுந்துகளுக்காக மக்கள் காத்திருப்பதும், அதில் பயணம் செய்வதும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

பயணச் சீட்டு விலை உயா்த்தப்படாமல் இயக்குவதும், உதிரி பாகங்களின் விலையேற்றமும், காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களும் சிற்றுந்து உரிமையாளா்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். இதுபோல தம்மம்பட்டியில் இருந்து இயக்கப்படும் ஒரே சிற்றுந்தும் தொடா் நஷ்டத்தால் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து, தம்மம்பட்டி சிற்றுந்து உரிமையாளா் சரவணன் கூறியதாவது:

சிற்றுந்து திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக ஊக்குவிக்கப்படவில்லை. இதனால் இதை நம்பியிருந்த தொழிலாளா்கள் மட்டுமின்றி உரிமையாளா்களும் வேறு தொழிலுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வழித்தட நீட்டிப்பு, வரிச் சலுகை வழங்க தமிழக முதல்வா் முன்வந்தால் மட்டுமே முன்னாள் முதல்வா் கலைஞா் கொண்டுவந்த சிற்றுந்து வசதி திட்டம் மீண்டும் புத்துயிா் பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com