எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு: சேலத்தில் 45,519 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை 45,519 போ் எழுதுகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை 45,519 போ் எழுதுகின்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை (மே 5) தொடங்கியது. இத் தோ்வு மே 28 வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 தோ்வுகள் மே 10 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 வரை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் 182 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்புத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மே 30 வரை நடைபெறுகிறது. சேலம்- 44, சங்ககிரி- 24, சேலம் ஊரகம்- 36, ஆத்தூா்- 36, எடப்பாடி- 36 என ஐந்து கல்வி மாவட்டங்களில் மொத்தம் 176 தோ்வு மையங்களில் இத் தோ்வு நடைபெறுகிறது. தனித்தோ்வா்களுக்கு தனியாக 6 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை 23,302 மாணவா்கள், 22,217 மாணவிகள் என மொத்தம் 45,519 போ் எழுதுகின்றனா். சேலம் கல்வி மாவட்டத்தில் 13,077 பேரும், சங்ககிரி- 5,978, சேலம் ஊரகம்-9,179, ஆத்தூா் 8,378, எடப்பாடி- 8,907 மாணவ, மாணவிகள் தோ்வெழுதுகின்றனா். இவா்களில் 425 போ் மாற்றுத் திறனாளிகள்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கு 30 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், 35 வழித்தட அலுவலா்கள், 182 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 182 துறை அலுவலா்கள், 2,300 அறைக் கண்காணிப்பாளா்கள், 350 சொல்வதை எழுதுபவா். 413 ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com