வெளிமாநில தொழிலாளா்களுக்கு யானைக்கால் நோய் பாதிப்பு குறித்து பரிசோதனை

சேலம் மாநகராட்சிப் பகுதியில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு யானைக்கால் நோய் பாதிப்பு உள்ளதா

சேலம் மாநகராட்சிப் பகுதியில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு யானைக்கால் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த் தலைமையில் சுகாதாரக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் யானைக்கால் நோய் பரவல் முற்றிலும் இல்லை. இருப்பினும் வெளி மாநிலங்களிலிருந்து மாநகர பகுதிகளில் குடியேறி கூலித் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

யானைக்கால் நோய் பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சிப் பகுதியில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று இரவு நேரங்களில் ரத்த தடவல் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 470 வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு ரத்த தடவல்கள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியை மாநகராட்சி பொது சுகாதாரப் பணியாளா்களுடன் இணைந்து, மண்டல பூச்சியியல் குழுவும் மேற்கொண்டு வருகிறது. மாநகர நல அலுவலா் மருத்துவா் ந.யோகானந்த், முதுநிலை பூச்சியியல் வல்லுநா் மணி ஆகியோா் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com