சங்ககிரியில் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின்
சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லாரி உரிமையங்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி.
சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லாரி உரிமையங்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி.

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களின் வாகனங்களுக்கு  வாடகைக்கு ஏற்றிச்செல்ல பாரங்கள் வழங்க வலியுறுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளிவிழா கட்டிட வளாகத்தில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கந்தசாமி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியது:-

சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தொடங்குவதற்கும் மற்றும் குவாரிகளுக்கும் நிலம் அளித்த உரிமையாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், மற்றவர்களுக்கு லாரிகளை வைத்து தொழில் செய்பவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் மூலப்பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு கொண்டு செல்ல விண்ணப்பங்களை சங்ககிரி மேற்குபகுதியில் உள்ள லாரிகளில் வாடகை அடிப்படையில் அனுப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில்  2021-ம் வருடம் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் மேற்கு பகுதியில் உள்ள லாரிகளுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் பாரங்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்காமல் வேறு ஒரு முகவரை நியமனம் செய்து அதன் மூலம் பாரங்களை ஏற்றிச்சென்று வருகின்றனர்.

இதனையடுத்து அந்நிறுவனத்தின் பாரங்கள் சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள லாரிகளுக்கு வழங்காததால் 400  லாரி உரிமையாளர்கள் குடும்பங்கள், லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதராம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கடந்த 2015-ம் ஆண்டு லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கும், நிறுவனத்திற்குமிடையே நடைபெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் லாரிகளுக்கு பாரங்களை ஏற்றிச்செல்ல நிறுவனம் அனுமதிக்க வேண்டும்.  இது குறித்து சங்ககிரி, திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் அரசின் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்டடுள்ளது.  எனவே சங்ககிரி மேற்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அப்பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு தொடர்ந்து வாடகைகளுக்கு பாரங்கள் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, மாநில பொருளாளர் சி.தனராஜ், திமுக ஒன்றியச் செயலர் (பொ) கே.எம்.ராஜேஷ், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலர் வி.ஆர்.ராஜா, எடப்பாடி, பவானி, குமாரபாளையம், மேட்டூர், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் கே.ஆசைதம்பி, வி.செல்வராஜ்,  முன்னாள் செயலர் கே.கே.நடேசன் உள்ளிட்ட பலர் இதில் பேசினர்.

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.செங்கோட்டுவேல், இணைச் செயலர் கே.முருகேசன், நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்ககிரி மேற்கு லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் என்.சின்னதம்பி நன்றி கூறினார்.

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் என்.கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியது:-

சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அப்பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக வாடகைக்கு பாரங்கள் ஏற்றிச்செல்ல அனுமதி வழங்காததால் அதைசார்ந்துள்ள குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அந்நிறுவனம் அப்பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு வாடகைக்கு ஏற்றி செல்ல பாரங்கள் வழங்காவிடில் விரைவில் உண்ணாவிரதம், கடையடைப்பு போரட்டங்கள் நடத்தப்படும். இதற்குண்டான தேதிகளை விரைவில் சங்கத்தின் செயற்குழுவினை கூட்டி முடிவு செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com