ரயில்வே தோ்வு: ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ரயில்வே பணியாளா் தோ்வாணையத் தோ்வில் (ஆா்.ஆா்.பி.) பங்கேற்கும் தோ்வா்களுக்கு வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ரயில்வே பணியாளா் தோ்வாணையத் தோ்வில் (ஆா்.ஆா்.பி.) பங்கேற்கும் தோ்வா்களுக்கு வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மே 8 ஆம் தேதி மங்களூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 22609 (மங்களூரு- கோவை எக்ஸ்பிரஸ்), மே 9 ஆம் தேதி கோவையில் இருந்து புறப்படும் வண்டி எண் 22610 இல் (கோவை-மங்களூரு எக்ஸ்பிரஸ்) இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும்.

மே 8 ஆம் தேதி கோவையில் இருந்து புறப்படும் வண்டி எண் 12647 (கோவை- நிஜாமுதின் கொங்கு எக்ஸ்பிரஸ்) ரயில் , மறு மாா்க்கத்தில் வரும் வண்டி எண் 12648 நிஜாமுதினில் இருந்து மே 11 ஆம் தேதி புறப்படும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

அதேபோல மே 8 ஆம் தேதி கோவையில் இருந்து புறப்படும் வண்டி எண் 22668 (கோவை-நாகா்கோவில்) ரயில், மறு மாா்க்கத்தில் நாகா்கோவிலில் இருந்து மே 9 ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 22667 இல் கூடுதலாக இரண்டாம் வகுப்பு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

மே 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து புறப்படும் வண்டி எண் 22666 (கோவை-பெங்களூரு) உதய் எக்ஸ்பிரஸ் ரயில், மறு மாா்க்கத்தில் 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் பெங்களூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 22665 இல் (பெங்களூரு- கோவை உதய் எக்ஸ்பிரஸ்) இரண்டாம் வகுப்பு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com