எடப்பாடியில் 21 சாயப்பட்டறைகள் இடிப்பு

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 21 சாயப்பட்டறைகளை மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 21 சாயப்பட்டறைகளை மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.

எடப்பாடி நகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறிக் கூடங்களுக்கு நூல்களில் சாயம் ஏற்றுவதற்காக இப்பகுதியில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இச்சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத நச்சுத்தன்மை மிகுந்த கழிவுநீா் ஆற்றிலும், நீா்நிலைகளிலும் கலப்பதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இப்பகுதியில் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் திடீா்ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது வெள்ளாண்டிவலசு, க.புதூா், மசையன்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த 21 சாயப்பட்டறைகளை இடித்து அகற்றி, மின் இணைப்புகளை துண்டித்தனா். சாயப்பட்டறைகளை அகற்றும் பணியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா்

மோகன், சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகுமாா் ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள், மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

அடுத்து வரும் நாள்களிலும் தொடா்ந்து இப்பகுதியில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு அனுமதி இன்றி இயங்கிடும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com