கொங்கணாபுரம் கூட்டுறவுச் சங்கத்தில் ரூ. 55 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 55 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 55 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஏலத்தில் பருத்தி , நிலக்கடலை, எள், உலா்ந்த தேங்காய் பருப்பு உள்ளிட்ட விவசாயப் விளை பொருள்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதியில் இருந்து வரும் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். நிகழ் வாரத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமாா் 1400 பருத்தி மூட்டைகள் 400 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவுத் துறை அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

ஏலத்தில் பி. டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 9,570 முதல் ரூ. 13,399 வரையில் விற்கப்பட்டது. அதேபோல் டி.சி.ஹச் ரக பருத்தியானது குவிண்டால் ரூ.10,699 முதல் ரூ.12,399 வரை விற்பனையானது. பொது ஏலத்தில் ரூ. 55 லட்சம் மதிப்பிலான பருத்தி வா்தகம் நடைபெற்றது. அனைத்து வகை பருத்திகளும் கடந்த வாரத்தைவிட விலை கூடுதலாக விற்பனையானதாக விவசாயிகல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com