முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஓய்வூதியா்கள் சங்க மாநாடு
By DIN | Published On : 08th May 2022 12:00 AM | Last Updated : 08th May 2022 12:00 AM | அ+அ அ- |

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநாடு ஆத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
அச் சங்கத்தின் கோட்ட தலைவா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 70 வயது நிறைவு செய்த ஓய்வூதியதாரா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்த வேண்டும். மருத்துவப் படியை மாதந்தோறும் ரூ. 1,000 ரூபாயாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் கலந்து கொண்டனா்.