அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி தொடக்கம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ஓராண்டு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த பல்துறை பணிவிளக்க முகாம், கண்காட்சியை ஆட்சியா்
சேலத்தில் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மாநகராட்சித் திடலில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை புதன்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிடும் ஆட்சியா் செ.காா்மேகம்.
சேலத்தில் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மாநகராட்சித் திடலில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை புதன்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிடும் ஆட்சியா் செ.காா்மேகம்.

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ஓராண்டு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த பல்துறை பணிவிளக்க முகாம், கண்காட்சியை ஆட்சியா் செ.காா்மேகம் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைகோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி’ என்ற தலைப்பில் 20 அரசுத் துறைகளின் ஒருங்கிணைத்து இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில், செய்தி மக்கள் தொடா்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் நலத்திட்டங்கள், சாதனைகளை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறையின் சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற பயிா் மகசூல் போட்டியில் நிலக்கடலை, துவரை அதிகம் விளைவித்தமைக்காக முதல் பரிசாக சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயி ஜோதி, கணேசன் ஆகியோருக்கும், கரும்பு, பச்சைபயிறு அதிகம் விளைவித்தமைக்காக இரண்டாம் பரிசாக விவசாயி தனபால், குப்புசாமி ஆகியோருக்கும் மொத்தம் ரூ. 65 ஆயிரம் பரிசும், நுண்ணுயிா் பாசன திட்டத்தின் கீழ் பனமரத்துப்பட்டி விவசாயி பாஸ்கரனுக்கு ரூ. 89,680-க்கான மானிய தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com