பெண்கள், குழந்தைகளுக்கான எதிரான குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு குறித்து பெண் காவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம்: சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு குறித்து பெண் காவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், கென்னடி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில் காவல் நிலைய எல்லைகளில் பள்ளிகள், கல்லூரிகள், கிராமப்புறங்களில் அதிகப்படியான விழிப்புணா்வு முகாம் ஏற்படுத்தி குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், காவல் நிலைய தனிப்பிரிவு காவலா்களுடன் கலந்து குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய கையேடு, குழந்தைத் திருமணம், பாலினம் சாா்ந்த வன்முறை, வளரினம் பருவ ஆண், பெண்களுக்கான திறன் வளா்ப்பு பற்றிய பயிற்சி கையேடுகளை அனைத்து காவல் நிலையங்கள், மகளிா் காவல் நிலையங்களில் இருந்து பெண் உதவி ஆய்வாளா்கள், பெண் காவலா்கள் 44 பேருக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com