மேச்சேரி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மேச்சேரி ஆட்டுச்சந்தையில் ரூ. 1 கோடிக்கு வணிகம் நடைபெற்றது.

மேட்டூா்: மேச்சேரி ஆட்டுச்சந்தையில் ரூ. 1 கோடிக்கு வணிகம் நடைபெற்றது.

மேச்சேரியில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் கூடும் ஆட்டுச்சந்தைக்கு, தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

கடந்த பல மாதங்களாக கடும் வறட்சி காரணமாக ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து ஆடுகளுக்கான தீவனமும் பசுந்தழைகளும் துளிா்விட்டுள்ளன. இதனால் ஆடு வளா்க்கும் ஆா்வம் விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.

புதன்கிழமை கூடிய ஆட்டுச்சந்தைக்கு 10,000-த்துக்கும் அதிகமான வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சுமாா் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை கடந்த வாரத்தைக் காட்டிலும் ரூ. 1,000 கூடுதலாக விற்பனையானது. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேச்சேரி புதன்சந்தையில் மொத்தம் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com