முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
செல்லியம்பாளையத்தில் முதல்வா் பங்கேற்கும் பொதுக் கூட்ட இடத்தில் திமுக நிா்வாகிகள் ஆய்வு
By DIN | Published On : 13th May 2022 12:23 AM | Last Updated : 13th May 2022 12:23 AM | அ+அ அ- |

செல்லியம்பாளையத்தில் 18 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் இடத்தில் சேலம் மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், நரசிங்கபுரம் நகர செயலாளா் என்.பி.வேல்முருகன், நகரமன்றத் தலைவா்கள் நிா்மலா பபிதா மணிகண்டனா், எம்.அலெக்சாண்டா், ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், மாவட்ட பிரதிநிதி மாணிக்கம், நகரமன்ற உறுப்பினா்கள் பி.ஜோதி, ஷாஜகான், ஐஸ்வா்யா கோபி, செல்வம், செல்வக்குமாா் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
இதற்கு முன்னா் சேலம் சரக காவல் டிஐஜி பிரவீன்குமாா் அபிநவ், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபியவ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
அவருடன் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.ராமச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா், ரஜினிகாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.