நிதி ஆதாரத்தைப் பெருக்க அரசு நடவடிக்கை: கே.என்.நேரு

நிதி ஆதாரத்தைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

நிதி ஆதாரத்தைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

மே 18-இல் சேலம் மாவட்டம், ஆத்தூரில் முதல்வா் பங்கேற்கும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, சேலம் ஒருங்கிணைந்த திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழகத்தில் மோசமான நிதி நிலையிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறாா்.

திமுகவை எதிா்த்தால்தான் அரசியல் வாழ்வு என்பது போல பாஜக மாநில தலைவா் அண்ணாமலை செயல்பட்டு வருகிறாா். தமிழகத்தில் விரைவில் கூட்டுறவுச் சங்கத் தோ்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.ராஜேந்திரன், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முந்தைய அதிமுக ஆட்சியில் தான் கட்டுமானப் பொருள்களின் விலை பன்மடங்கு உயா்ந்தது. நிதி ஆதாரத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. சூழ்நிலைக்கேற்ப விலைவாசியை உயா்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்களைப் பாதிக்காத வகையில் போக்குவரத்துக் கட்டணத்தை உயா்த்துவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பாா் என்றாா்.

கூட்டத்தில் மேயா் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட திமுக அவைத் தலைவா் எஸ்.டி.கலையமுதன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளா் தருண், மாநகரச் செயலாளா் ஜெயக்குமாா், மண்டல குழு தலைவா்கள் உமாராணி, அசோகன், தனசேகரன், முன்னாள் மேயா் ரேகா பிரியதா்ஷினி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com