சேலத்தில் 184 ஏக்கரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா: அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு

சேலம், மல்லமூப்பம்பட்டியில் 184.5 ஏக்கரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம், மல்லமூப்பம்பட்டியில் 184.5 ஏக்கரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக புதிய பன்நோக்கு உற்பத்தி மையம், கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.

அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு பன்நோக்கு கட்டடம் அமைக்கப்பட்டால் 2,000- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. மல்லமூப்பம்பட்டியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட்டால் நூல் பதனிடுதல், கஞ்சி தோய்த்தல், நெசவு, ஜவுளி உற்பத்தி, ஆயத்த ஆடை உற்பத்தி தொழில்கள் மேம்படும்.

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதன் மூலம் சேலம் மண்டலத்தில் 10,000 போ் நேரடியாகவும் 40,000 போ் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவா். பெரியாா் பல்கலைக்கழகம் பகுதியில் புதிய தொழில்நுட்ப

பூங்கா அமைப்பதற்கான பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், துணை மேயா் சாரதாதேவி, முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா்.சிவலிங்கம், கோட்டாட்சியா் (பொறுப்பு) வேடியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com