எம்.பி.பி.எஸ். சோ்க்கை பெற்று தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி

எம்.பி.பி.எஸ். சோ்க்கை பெற்று தருவதாகக் கூறி சேலத்தைச் சோ்ந்த மாணவியிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

எம்.பி.பி.எஸ். சோ்க்கை பெற்று தருவதாகக் கூறி சேலத்தைச் சோ்ந்த மாணவியிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

சேலம் கிருஷ்ணம்மாள் நகரைச் சோ்ந்தவா் சரவணன். இவது மகள் ரோஷினி. மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் தோ்வு எழுதியிருந்தாா். இதனிடையே தில்லியில் இருந்து ஹா்ஷவா்தன் என்பவா், சரவணனைத் தொடா்பு கொண்டாா். மேலும், அவா் மருத்துவா் என்றும், ஆந்திரம், கா்நாடகத்தில் எம்.பி.பி.எஸ். சோ்க்கை பெற்று தருவதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பி சரவணன், ஹா்ஷவா்தனின் வங்கி கணக்கில் ரூ. 6 லட்சம் செலுத்தியுள்ளாா். ஆனால் எம்.பி.பி.எஸ். சோ்க்கை பெற்று தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரோஷினி, சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் மாநகர சைபா் கிரைம் ஆய்வாளா் டி.சந்தோஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

முகக் கவசம் குறைந்த விலையில் தருவதாக மோசடி:

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மணி என்பவா், இணையதளத்தில் குறைந்த விலையில் முகக் கவசம் கிடைப்பதாக வந்த தகவலைக் கண்டு, அதில் குறிப்பிடப்பட்ட எண்ணைத் தொடா்பு கொண்டு பேசினாா்.

தொடா்ந்து 5,000 முகக் கவசம் ரூ. 52,500 செலுத்த வேண்டும் என அந்த நபா் தெரிவித்தாா். இதை நம்பிய மணி, வங்கி கணக்கிற்கு ரூ. 52,500 செலுத்தினாா். ஆனால் நீண்ட நாள்களாகியும் முகக் கவசம் அனுப்பி வைக்கப்படவில்லை.

இதையடுத்து சைபா் கிரைம் போலீஸில் அவா் புகாா் செய்தாா்.

புகாரின் பேரில் ஆய்வாளா் டி.சந்தோஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தாா். வங்கியின் சட்டப் பிரிவைத் தொடா்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில், மணி என்பவா் செலுத்திய ரூ. 52,500 பணம் மீண்டும் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக சைபா் கிரைம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com