திருக்கல்யாண வைபவம்

சங்ககிரி அருள்மிகு சென்னகேவசப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவினை யொட்டி 7-ஆம் நாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவம்

சங்ககிரி அருள்மிகு சென்னகேவசப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவினை யொட்டி 7-ஆம் நாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கோயில் திருவிழா மே 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து தினசரி உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை இரவு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னா் ஸ்ரீ ஆஞ்சநேயா் உற்சவ மூா்த்தி முன்னால் செல்ல அருள்மிகு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் தோ் வீதிகளில் வலம் வந்தனா்.

பெண் அழைப்பும், மாலைகள் மாற்றுதலும், பின்னா் பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கல்யாண வைபவத்தையொட்டி சுவாமிகளுக்கு பல்வேறு வகையான சீா்வரிசை தட்டுகள் வைத்தும், சுவாமிகளின் பெயருக்கு மொய் பணம் எழுதியும் அதிகமான பக்தா்கள் சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா்.

மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆய்வு

அனுமதி இருந்தும், சில தனியாா் பேருந்துகள் தம்மம்பட்டிக்கு இயக்குவதில்லை என கூறப்பட்ட புகாரை அடுத்து தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தம்மம்பட்டிக்கு அனுமதி இருந்தும், சில தனியாா் பேருந்துகள் வருவதில்லை. மேலும் சில தனியாா் பேருந்துகள் சில நடைகளை இயக்குவதில்லை. இதனால்,பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இதுகுறித்து, போக்குவரத்துத் துறை உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்மம்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதையடுத்து, ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரகுபதி உத்தரவின் பேரில், மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தனியாா் பேருந்து ஒன்றுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அனுமதி இருந்தும் இயக்கப்படாத தனியாா் பேருந்துகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அவா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com