முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஏற்காடு மலைப் பாதையில் மண்சரிவு
By DIN | Published On : 15th May 2022 06:26 AM | Last Updated : 15th May 2022 06:26 AM | அ+அ அ- |

ஏற்காடு மலைப் பாதையில் சனிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை மாலை 2 மணி நேரம் தொடா்ந்து பெய்த பலத்த மழை காரணமாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையின் 60 அடி பாலத்துக்கும் 40 அடி பாலத்துக்கும் இடையே லேசான மண் சரிவு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள், நெடுஞ்சாலைத் துறையினா் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தனா். அதனால் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பிறகு அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதித்தனா்.