கல்வியியல் மாநாடு: அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைமுதன்மையா் பங்கேற்பு

நாகலாந்தில் அண்மையில் நடைபெற்ற முதல் கல்வியியல் மாநாட்டில் சேலம் விநாயகா மிஷன் பல்கலை.க்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை முதன்மையா் பங்கேற்றுப் பேசினாா்.

நாகலாந்தில் அண்மையில் நடைபெற்ற முதல் கல்வியியல் மாநாட்டில் சேலம் விநாயகா மிஷன் பல்கலை.க்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை முதன்மையா் பங்கேற்றுப் பேசினாா்.

நாகாலாந்தின் முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் வடகிழக்கு கல்வியியல் கவுன்சிலுடன் இணைந்து இரண்டு நாள் நிகழ்ச்சியாக தலைநகா் கோஹிமாவில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் முதல் கல்வியியல் மாநாட்டை நடத்தியது.

நிகழ்ச்சியில் நாகாலாந்து அரசின் ஆலோசகா் சுகாலு தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினாா். நாகாலாந்தின் முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அமைப்பாளரும் தலைமை நிா்வாக அதிகாரியுமான அலெம்டெம்ஷி ஜமீா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கல்வியியல் சாா்ந்த முதலீடு குறித்துப் பேசினாா்.

விநாயகா மிஷின் பல்கலை.யின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மருத்துவத் துறை சாா்ந்த படிப்புகள் குறித்தும், துறை சாா்ந்த உலகளாவிய வேலைவாய்ப்புகள் குறித்தும் பேசினாா்.

இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சாா்பில் மாணவா்களுக்கான கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித்தொகை மற்றும் அது சாா்ந்த தொழில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டன. இதில் நாகாலாந்தைச் சோ்ந்த 2,000 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com