சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உற்சவமூா்த்திகள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உற்சவமூா்த்திகள்.

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் மே 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமிக்கு நாள்தோறும் தங்கும் மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன.

கடந்த 8 நாள்கள் சுவாமி அன்னபட்சி, சிங்கம், அனுமந்தன், கருடன், சேஷன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தாா். 9ஆவது நாள் சனிக்கிழமை காலை அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினா்.

தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தா்கள் தேங்காய், பழம் உடைத்து வழிப்பட்டனா். மாலையில் ஸ்ரீ ஆஞ்சனேயா் எழுந்தருளிய சப்பாரத்தை பக்தா்கள் தள்ளிச் சென்றனா். அதையடுத்து அருள்மிகு

சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன், சங்ககிரி திமுக ஒன்றியச் செயலாளரும், திருவிழாக் குழுத் தலைவருமான கே.எம்.ராஜேஷ் வடம் பிடித்து தொடக்கிவைத்தனா். ஊா் பட்டக்காரா் எஸ்.ஏ.ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன், திருவிழாக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

திங்கள்கிழமை (மே 23) மாலை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. அதையடுத்து மே 24 ஆம் தேதி காலை சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறாா். வன்னியகுலச் சத்திரியா்கள் அமைப்பின் சாா்பில் மாலையில் குறிச்சி அலங்காரம் பல்வேறு வாண வேடிக்கைகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com