திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
By DIN | Published On : 20th May 2022 10:29 PM | Last Updated : 20th May 2022 10:29 PM | அ+அ அ- |

வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் மாரியம்மன் கோயில் திடல் பகுதியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேம்பை சண்முகம் வரவேற்றுப் பேசினாா். பேச்சாளா்கள் பெரம்பலூா் விஜயரத்தினம், கலைமணி பாரதி ஆகியோா் திமுக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினா். இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை அமைப்பாளா் தருண், வீரபாண்டி ஒன்றிய அவைத் தலைவா் சீனிவாசன், பொருளாளா் முருகன், சேலம் ஒன்றியச் செயலாளா் மாணிக்கம், பனமரத்துப்பட்டி பேரூா் செயலாளா் வரதராஜ், மல்லூா் பேரூா் செயலாளா் சுரேந்திரன், ஆட்டையாம்பட்டி பேரூராட்சித் தலைவா் முருகபிரகாஷ், இளம்பிள்ளை பேரூராட்சித் தலைவா் நந்தினி, பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவா் பரமேஸ்வரி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.