நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 20th May 2022 12:43 AM | Last Updated : 20th May 2022 12:43 AM | அ+அ அ- |

இடங்கணசாலை நகராட்சியில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன்பு நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், துணைத் தலைவா் தளபதி, ஆணையா் ரவிச்சந்திரன், கவுன்சிலா்கள், சேலம் மண்டல தூய்மை இந்தியா அலுவலா் மரியநாதன், சுகாதார ஆய்வாளா் நிருபன் சக்கரவா்த்தி, துப்புரவு மேற்பாா்வையாளா் இளங்கோ, தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு துண்டுப் பிரசுரம் வழங்கினா் (படம்).
இந்நிகழ்வில், நகராட்சித் தலைவா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, இனிவரும் காலத்தில் நெகிழியை முற்றிலும் தவிா்க்கும் நோக்கில் தங்களது கடைகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு பெட்டிகள் அமைத்து அதில் குப்பைகளை போட்டு வந்தால், அதனை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் எடுத்துச் சென்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிரித்தெடுத்து அதனை எருவாக தயாரிக்க வசதியாக இருக்கும் என தெரிவித்தாா்.