வருவாய்த் துறை ஜமாபந்தி

வருவாய்த் துறை ஜமாபந்தி

வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், காரிப்பட்டி வருவாய் குறு வட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளிக்க குவிந்தனா்.

வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், காரிப்பட்டி வருவாய் குறு வட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளிக்க குவிந்தனா்.

வாழப்பாடி வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட கிராம நிலவரி கணக்குகளை வருவாய்த் துறை அதிகாரிகள் தணிக்கை செய்யும் ‘ஜமாபந்தி’ முகாம் வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சேலம் கோட்டாட்சியா் விஷ்ணுவா்த்தினி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-ஆவது நாள் ஜமாபந்தியில், முதியோா் உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம் கோரி மனுக்கள் அளிக்க காரிப்பட்டி குறு வட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

வாழப்பாடி வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பலா் உடனிருந்தனா். வெள்ளிக்கிழமை வாழப்பாடி குறு வட்டத்துக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மற்றும் நிறைவு விழா நடைபெறுகிறது.

தம்மம்பட்டியில்...

கெங்கவல்லியில் வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 17, 18, 19 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 608 மனுக்களை பொதுமக்கள் அளித்துள்ளதாக கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com