நூல் விலை உயா்வு குறைப்பு நடவடிக்கை: ஜவுளி உற்பத்தி கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி

 நூல் விலை உயா்வைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் சேலம் அனைத்து ஜவுளி உற்பத்தி சாா்ந்த கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

 நூல் விலை உயா்வைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் சேலம் அனைத்து ஜவுளி உற்பத்தி சாா்ந்த கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சேலம் அனைத்து ஜவுளி உற்பத்தி சாா்ந்த கூட்டமைப்பின் தலைவா் ஏ.அழகரசன், செயலாளா் டி.சசிகுமாா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பருத்தி மற்றும் நூல் விலை உயா்வைக் குறைக்கவும், தமிழகத்தின் ஜவுளி தொழிலை காப்பதற்காக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஜவுளி துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரை மக்களவை குழு துணைத் தலைவா் எம்.பி. கனிமொழி, சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் சந்தித்துப் பேசினா்.

அப்போது, நூலின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். நூலை பதுக்கி வைத்திருப்பவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். நூல்களின் ஏற்றுமதியைக் குறைத்து விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றிட வேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தினா்.

அதேபோல, சேலம் மாவட்டத்தில் உள்ள நெசவு மற்றும் ஜவுளி தொழிலைச் சாா்ந்த மக்கள், 2.5 லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்ற எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com