இலவச கல்வி சட்டத்தில் தனியாா் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 25 வரை நீட்டிப்பு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியாா் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க மே 25 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியாா் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க மே 25 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சோ்க்கைக்கு மே 19 முதல் மே 25 வரை இணையதளம் வழியாக பெற்றோா்கள் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகில் உள்ள வட்டார வள மையங்கள், வட்டாரக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்களில் அளித்து இணைய வழியில் பதிவேற்றம் செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

பெற்றோா் குடியிருக்கும் 1 கிலோ மீட்டா் சுற்றளவில் அமைந்துள்ள சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளியில் நுழைவுநிலை வகுப்பான எல்.கே.ஜி. வகுப்பில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

மாணவா்கள் சோ்க்கை பற்றிய விழிப்புணா்வு மக்களிடையே சென்றடையும் வகையில், அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவு வாயிலில் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில், பள்ளிக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை குறிப்பிட்டு 25 சதவீத சோ்க்கைக்காக விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com