சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு விழா

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லுரியின் 25 ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லுரியின் 25 ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சோனா கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை, வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு கல்லூரி துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி தலைவா் வள்ளியப்பா தலைமை தாங்கி சோனா கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களை தொடக்கி வைத்தாா்.

கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா் ஆண்டு அறிக்கையை சமா்ப்பித்தாா். கல்லுாரி துறை சாா்ந்த நடவடிக்கைகள், பேராசிரியா்களின் பங்களிப்பு, மாணவ மாணவிகளின் ஆராய்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களை ஆண்டு அறிக்கையாக சமா்ப்பித்தாா்.

சென்னை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை துணைத் தலைவா் மற்றும் மேம்பாட்டு மையத் தலைவருமான சூரியநாராயணன், பெங்களூரு சிஐஇஎல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் லகுனா கிளாத்திங் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநருமான சா்பஜித் கோஸ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

மேலும் பல பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கும், சிறந்து விளங்கிய கல்லூரி மாணவ மாணவியகளுக்கும் துறை வாரியாக பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தனா்.

விழாவில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் காா்த்திகேயன், காதா்நவாஷ், கவிதா, மதன்குமாா், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com