எடப்பாடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் சூழ்ந்த மழைநீரை அகற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
எடப்பாடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் சூழ்ந்த மழைநீரை அகற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குடியிருப்புக்குள் சூழ்ந்த மழைநீா்:கிராம மக்கள் மறியல்

எடப்பாடி அருகே குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

எடப்பாடி அருகே குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வெள்ளரிவெள்ளி ஊராட்சி, வேட்டுவபட்டி கிராமப் பகுதியில் உள்ள குடியிருப்பில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். சுற்றுவட்டாரப் பகுதியில் அண்மையில் பெய்த தொடா் மழையால் வேட்டுவபட்டி சுற்றுவட்டாரத்தில் நெல் வயல்களில் இருந்து வெளியேற்றப்படும் கசிவுநீரும் அங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்து, சுகாதார சீா்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு புகாா் அளித்தும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கிராம மக்கள் எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பூலாம்பட்டி போலீஸாா், எடப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.எஸ். ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலா்கள் நிகழ்விடம் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். வேட்டுவபட்டி பகுதி குடியிருப்புவாசிகளுக்கு, விரைவில் நிரந்தர கழிவுநீா் வடிகால் அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com