ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இளம் பெண் உயிரிழப்பு: கொலையா ? தற்கொலையா?
By DIN | Published On : 22nd November 2022 01:09 PM | Last Updated : 22nd November 2022 01:09 PM | அ+அ அ- |

ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இளம் பெண் உயிரிழந்த நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என ஆத்தூர் ஊரக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதையன் மகள் சரண்யாவுக்கும் திருமணம் நடைபெற்று ,சரண்யாவும் மணிமாறனும் கல்லாநத்தம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒருமாதத்திற்க்கு முன்னால் ஏற்பட்ட தகராறு காரணமாக சரண்யா, ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பின்னர் இருவரையும் அழைத்து சமரச பேச்சு நடத்தி வைத்தனர். இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இன்று அவரது வீட்டில் சரண்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த சரண்யாவின் தந்தை மாதையன் எனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த மணமக்கள்! பரவும் புகைப்படம்
இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.