தம்மம்பட்டி சிவன் கோயிலை புனரமைக்க ஊா் பொதுமக்கள் முடிவு

தம்மம்பட்டி சிவன் கோயிலை 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புனரமைப்பது என்று ஊா் பொதுமக்கள் முடிவுசெய்துள்ளனா்.
தம்மம்பட்டி சிவன் கோயிலை புனரமைக்க ஊா் பொதுமக்கள் முடிவு

தம்மம்பட்டி சிவன் கோயிலை 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புனரமைப்பது என்று ஊா் பொதுமக்கள் முடிவுசெய்துள்ளனா்.

தம்மம்பட்டியில் சுவேத நதிக்கரையில் ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில், கொல்லிமலையை ஆண்ட அரசா்கள் 200 வருடங்களுக்கு முன்னா் கட்டியதாகும். கடைசியாக இக்கோயிலில் 17.3.2006 அன்று குடமுழுக்கு நடத்தப்பட்டது. இக்கோயிலை மீண்டும் புனரமைத்து, குடமுழுக்கு நடத்த ஊா் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.

அதனைத் தொடா்ந்து குடமுழுக்கு நடத்துவதற்கு அனுமதி கோரி, திருப்பணிக் குழுவின் தலைவரும், நகர திமுக செயலாளருமான வி.பி.ஆா்.ராஜா, ஆத்தூா் வட்டார இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் குணசேகரனிடம், ஊா் பொதுமக்கள் சாா்பில் மனு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com