வாழக்கோம்பை பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 28th November 2022 01:44 AM | Last Updated : 28th November 2022 01:44 AM | அ+அ அ- |

வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டடங்களை ஆய்வு செய்த எம்எல்ஏ நல்லதம்பி.
தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளியில் கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் நல்லதம்பி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பள்ளியில் ஒழுகும் கட்டடங்கள், பழதடைந்த கட்டடங்கள் குறித்தும் ஆய்வு செய்தாா். அங்கு நடந்த வாக்காளா் சுருக்கத் திருத்த முகாமில்,பொதுமக்கள் தந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா் ச.ராதாவிடம் வழங்கினாா். இதில் அதிமுக கெங்கவல்லி மேற்கு ஒன்றியச் செயலாளா் துரை.ரமேஷ், வாழக்கோம்பை வாா்டு உறுப்பினா் தேவி சரவணன், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
இதேபோல செந்தாரப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் நடந்த அனைத்து வாக்காளா் திருத்த சுருக்க முகாம்களுக்கு எம்எல்ஏ நல்லதம்பி சென்று, சோ்க்கை விண்ணப்ஙகளை வழங்கினாா்.