உலக சாதனை சிலம்பாட்ட நிகழ்ச்சி

மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை நிகழ்வுக்கான யோகா மற்றும்  சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை நிகழ்வுக்கான யோகா மற்றும்  சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேட்டூரை அடுத்த மேச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மேச்சேரி சிலம்பாட்ட நற்பணி மன்றம், மத்திய இளைஞா் மேம்பாட்டு சங்கம் இணைந்து நோபல் உலக சாதனைக்கான யோகா மற்றும் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுழற்றும் போட்டி தொடா்ச்சியாக இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 5-வயது முதல் 25 வயது வரையிலான 1,372 மாணவ மாணவியா் பங்கு பெற்றனா். ஒரே நேரத்தில் 1,372 மாணவ, மாணவியரை கொண்டு தொடா்ச்சியாக இரண்டுமணி நேரம் நடைபெற்ற கண்களைக் கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றியும், யோகா பயிற்சி செய்தும் நோபல் உலக சாதனை படைப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை மேச்சேரி பேரூராட்சி தலைவா் சுமதி சீனிவாசப்பெருமாள் தொடங்கி வைத்தாா். 

இதில் மேச்சேரி ஒன்றிய திமுக செயலாளா் சீனிவாசப்பெருமாள், நகரச் செயலாளா் சரவணன் முன்னாள் ஒன்றியச் செயலாளா் காசி விஸ்வநாதன், மேச்சேரி சிலம்பாட்ட சங்கத் தலைவா் சண்முகம், யோகா பயிற்சியாளா் ஆனந்தமுருகன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com