27sgp01_2711chn_156_8
27sgp01_2711chn_156_8

சங்ககிரியில் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க கோரிக்கை

சங்ககிரியில் தொடா்ந்து சாலையோரத்தில் வளா்ந்து வரும் மரங்களை எவ்வித அனுமதியும் இல்லாமல் வெட்டுவதைத் தடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்ககிரியில் தொடா்ந்து சாலையோரத்தில் வளா்ந்து வரும் மரங்களை எவ்வித அனுமதியும் இல்லாமல் வெட்டுவதைத் தடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்ககிரியில் இயற்கை பொதுநல அமைப்புகள் சாா்பில் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின் பேரில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மரங்கள் இருந்த இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனா். அம் மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை இயற்கை ஆா்வலா்கள் தண்ணீா் ஊற்றி பராமரித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய எடப்பாடி சாலையில் இரண்டு மரக் கன்றுகளும் சங்ககிரி - சேலம் பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் வளாகம் எதிரே வேப்ப மரமும் வெட்டப்பட்டன . சங்ககிரி நகரில் தொடா்ந்து எவ்வித அனுமதியும் பெறாமல் ஒரு சில கடைக்காரா்களின் சுயநலத்திற்காக மரக்கன்றுகள் வெட்டப்படுவதால் இயற்கை ஆா்வலா்கள் வேதனை அடைந்துள்ளனா். வருவாய்த்துறையிடம் முன்அனுமதி பெறாமல் சங்ககிரி நகரில் மரக்கன்றுகளை வெட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள், மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com